Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வி.ஜி.எஸ்., தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வி.ஜி.எஸ்., தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வி.ஜி.எஸ்., தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வி.ஜி.எஸ்., தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா

ADDED : செப் 09, 2011 12:53 AM


Google News

தூத்துக்குடி : தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.

தூத்துக்குடியில் உள்ள விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியையாக பணியாற்றி வரும் ஜெயாபால் 1979ம் ஆண்டு கணித ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 28 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிய அவர் 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2008ம் ஆண்டு தலைமையாசிரியையாக பதவி உயர்வு பெற்றார். அவர் முதலில் பண்டாரசெட்டிவிளையில் உள்ள மேரிஆன்பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாக ஓராண்டு பணியாற்றினார். அதன் பின்னர் விக்டோரியா மகளிர் மேல்நிலைக்கு பணிமாறுதல் பெற்று வந்தார். தலைமையாசிரியை ஜெயாபாலின் 28 ஆண்டுகால ஆசிரிய பணியின் போது செய்த பல சாதனைகளை பாராட்டு விதமாக தமிழக அரசு சார்பில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை பெற்ற ஜெயாபாலுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. பாராட்டு விழாவிற்கு குருத்துவ செயலாளர் லூர்து ராஜ் ஜெயசிங் தலைமை வகித்தார். உப தலைவர் சாமுவேல் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சந்திரா மனோகரன் வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயாபாலுக்கு பிஷப் ஜெபச்சந்திரன் பொன்னாடை அணிவித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டி.என்.டி., பொருளாளர் சாமுவேல் செல்வராஜ், லே செயலாளர் மோகன், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஐசக், பெண்கள் ஐக்கிய சங்க செயலாளர் எபன் ஜேசன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் தாசன் பொன்ராஜ், பள்ளி நலக்குழு செயலாளர் பீட்டர் ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி தாளாளர் சந்திரா மனோகரன் தலைமையாசிரியைக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கினார். உதவி தலைமையாசிரியை லில்லி கிரேஸ் சந்திரிகா நன்றி கூறினார். விழாவில் விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us