கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஆக 17, 2011 10:03 AM

கோவை: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1988- 92ம் ஆண்டுகளில் பயின்ற 35 முன்னாள் மாணவர்கள்.
19 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் கல்லூரிக்கு வந்து முதல்வர் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள், அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து கல்லூரி பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் வி.விஜிலேஷ் மற்றும் ஜி.எஸ்.நந்தகுமார், அவர்களுக்கு கல்லூரியைச் சுற்றிக் காண்பித்தனர். பின்னர் முதல்வர் எஸ்.ராமச்சந்திரன், இயக்குநர் ஜெ.சண்முகம் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்களுக்கு கற்பித்த பேராசிரியர்கள் ராம்பிரகாஷ், காந்தி உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்.ஜெயபதி ஏற்பாடுö சய்திருந்தார்.


