/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சுதந்திர தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைசுதந்திர தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சுதந்திர தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சுதந்திர தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சுதந்திர தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ADDED : ஆக 14, 2011 10:45 PM
ராமேஸ்வரம் : சுதந்திரதினத்தில் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றிட வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்ததை தொடர்ந்து, இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.
கச்சத்தீவை மீட்கவும், தீவில் தேசிய கொடியை ஏற்றவும் வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் இன்று ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி அறிவித்தது. சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் நடந்த பா.ஜ.,கட்சி கடல் முற்றுகை போராட்டத்தின்போது பாதுகாப்பு ஏஜன்சிகளின் கண்காணிப்பையும் மீறி பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுடன் நடுக்கடலில் படகில் சென்று கடல் முற்றுகை போராட்டத்தை நடத்திய சம்பவம் போலீசாரிடையே சர்ச்சையை உருவாக்கியது. இதுபோல் இந்து மக்கள் கட்சியினரும் ரகசியமாக படகில் செல்ல முயற்சி செய்யலாம் என கருதிய போலீசார், முன்னெச்சரிக்கையாக மீனவர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, 'இந்து மக்கள் கட்சியினருக்கு படகு வழங்கக்கூடாது, மீறி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளனர். இதனிடையே இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது குறித்து மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.