/உள்ளூர் செய்திகள்/மதுரை/வரைபட அனுமதியில் கூட்டுச்சதிவரைவாளர்களுக்கு எச்சரிக்கைவரைபட அனுமதியில் கூட்டுச்சதிவரைவாளர்களுக்கு எச்சரிக்கை
வரைபட அனுமதியில் கூட்டுச்சதிவரைவாளர்களுக்கு எச்சரிக்கை
வரைபட அனுமதியில் கூட்டுச்சதிவரைவாளர்களுக்கு எச்சரிக்கை
வரைபட அனுமதியில் கூட்டுச்சதிவரைவாளர்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 25, 2011 03:29 AM
மதுரை:மதுரை மாநகராட்சியில் வரைபட அனுமதி பெறவிடாமல் மக்களை
சிரமப்படுத்தும் வரைவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம்
முடிவு செய்துள்ளது.மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் முழுமைத்திட்டம்,
உயரக்கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டட விதிகள் நடைமுறையில் உள்ளன.
அதை
பின்பற்றாமல் வரைவாளர்கள், கட்டட வரைபடம் தயாரிப்பதாகவும், மக்களிடம் பெற்ற
வரைபடங்களை மாநகராட்சியின் அனுமதிக்கு கொண்டுவராமலும், இடையூறு செய்வதாக
புகார் எழுந்தது. கூட்டுச்சதியே காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.
'இச்செயலில் ஈடுபடும் வரைவாளர்களின் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக,'
மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக
வரைவாளர்களுக்கு ஆலோசனை வழங்க, மாநகராட்சியில் இன்று சிறப்பு
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறுகையில்,
''அதிகாரி ஒருவரின் பின்னணியில் கூட்டுச்சதி நடக்கிறது. மக்கள் மத்தியில்
மாநகராட்சி மீது விரக்தியை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். கட்டட வரைபட
அனுமதி வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. சம்மந்தப்பட்டவர்கள் நேரில்
வந்து அனுமதி பெறலாம்,'' என்றார்.


