/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/1.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்: அமைச்சர்1.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்: அமைச்சர்
1.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்: அமைச்சர்
1.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்: அமைச்சர்
1.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்: அமைச்சர்
ADDED : செப் 19, 2011 12:42 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 833 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும்' என தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். பெரம்பலூர் அருகே லாடபுரம் பஞ்சாயத்து சரவணபுரத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களான இல்லத்தரசிகளுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
விழாவில் 130 இல்லத்தரசிகளுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் வழங்கி தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பழனிசாமி பேசியதாவது: அண்ணாதுரை பிறந்த நாளில் முதல்வர் உருவாக்கிய திட்டங்கள் அத்தனையும் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் நிறைவேற்றி உள்ளார். கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்கள் மிக்சி, கிரைண்டர், ஃபேன் வாங்க இயலாத நிலையில் அதை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல்வர் வழங்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1.83 கோடி ரேஷன் கார்டுதாரருக்கு மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கப்பட உள்ளது. அதன் மூலம் ஏழு கோடி பேர் பயன் பெறுவர். பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 ஆயிரம் பேருக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 833 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக நான்கு ஆடுகள் வழங்கும் திட்டம், பால் உற்பத்தியை பெருக்க கிராம மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களையும் முதல்வர் தொடக்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்.பி., இளவரசன், டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், திட்ட இயக்குநர் சுமதி, பி.ஆர்.ஓ., கண்ணதாசன், துணை கலெக்டர் தெய்வசிகாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கௌரி ஆகியோர் பங்கேற்றனர்.