ADDED : ஆக 18, 2011 12:01 AM
தேனி : தேனியில் கரும்பில் நவீன சாகுபடி குறித்த கருத்தரங்கு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை பொதுமேலாளர் சதாசிவம் வரவேற்றார்.
விவசாய இணை இயக்குனர் இமாம்தீன் முன்னிலை வகித்தார். ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை துணைத்தலைவர்கள் மு.கிருஷ்ணன், சத்தியமூர்த்தி, இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவன முதன்மை மண்டல மேலாளர் மதியழகன், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஹேமா சலோமி, விவசாய பொறியியல்துறை செயற்பொறியாளர் ராஜா, முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


