போலீஸார் மீது கல்வித்துறை அதிருப்தி
போலீஸார் மீது கல்வித்துறை அதிருப்தி
போலீஸார் மீது கல்வித்துறை அதிருப்தி
ADDED : ஆக 31, 2011 01:02 AM
xஈரோடு: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஈ-மெயில் மூலம் விபரங்களை ரகசியமாக திருடியவர் மீது புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் போலீஸார் மீது, கல்வித்துறை அதிருப்தியடைந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் அளவிலான நடவடிக்கைகள், உத்தரவுகள் ஆகியவை, அதற்கென உள்ள இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மாநில திட்ட இயக்குநருக்கும் தகவல்கள், இணையதளம் மூலம் அனுப்பப்படுகிறது. பெருந்துறையை சேர்ந்தவர் மயில்சாமி. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயலாளாரக உள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்க விபரங்களை, அதன் ஈ-மெயில் மூலம் ரகசியமாக திருடியதாக, துறை ரீதியாக கடந்த 11ம் தேதி ஈரோடு எஸ்.பி.,க்கு புகார் அளிக்கப்பட்டது. புகார் தெரிவித்து 20 நாட்களுக்கு மேலாகியும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கல்வித்துறை அதிருப்தியில் உள்ளது.


