/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்'"திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்'
"திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்'
"திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்'
"திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்'
ADDED : ஆக 20, 2011 11:32 PM
பொள்ளாச்சி:''அரசு அதிகாரிகள், அரசின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்க
வேண்டும்,'' என, உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசினார்.பொள்ளாச்சி அடுத்த
தொண்டாமுத்தூரில், மாவட்ட கலெக்டரின் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
பொள்ளாச்சி எம்.பி., சுகுமார் முன்னிலை வகித்து பேசினார். உடுமலை
எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது:முதியோர் உதவித்தொகைக்கு, வறுமைக்
கோட்டுக்கு கீழுள்ளவர்கள் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என, கடுமையாக
நடந்துக் கொள்ளக் கூடாது. ஏழை மக்கள் வசிக்கும் இடம் தேடி வந்து, நாங்களே
மனுக்களை வாங்கி பிரச்னையை தீர்த்து வைக்கிறோம்; ஏழை மக்களின் வீடு தேடி
வரும் சிறந்த அரசாங்கமாக, இந்த அரசு விளங்குகிறது. கோவை மாவட்டத்தில்
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றிய பகுதிகளை
ஒருங்கிணைத்து, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டத்தையும், திருப்பூர்
மாவட்டத்தில் குடிமங்கலம், உடுமலை ஒன்றிய கிராமங்களை ஒருங்கிணைத்து,
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள், அரசின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
மக்களின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து, அதை தீர்த்து
வைக்கும் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, எம்.எல்.ஏ., ஜெயராமன்
பேசினார்.கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் 6 லட்சம்
ரேஷன் கார்டுகளுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களில்,
4,500 பேருக்கு புதிய ரேஷன் கார்டும், முதியோர் உதவித்தொகை 4,600
பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி
மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ரேஷன்
கார்டு உள்ள அனைவருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி
வழங்கப்படும்,'' என்றார்.இலவச வீட்டுமனைப்பட்டா 64 பேருக்கும், முதியோர்
உதவித்தொகை 73, தையல் இயந்திரம் 6, ரேஷன் கார்டு 9 பேருக்கும், இலவச சலவை
பெட்டி 5 பேருக்கும் வழங்கப்பட்டன. சமூக நலத்துறையில் பெண் குழந்தைகள்
பாதுகாப்பு திட்டத்தில், 5 பேருக்கு என, 31.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட
உதவி வழங்கப்பட்டன.


