கமுதி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்படுமா
கமுதி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்படுமா
கமுதி பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்படுமா
ADDED : செப் 07, 2011 10:53 PM
கமுதி : கமுதியில் பஸ் ஸ்டாண்ட் கூரை மற்றும் தூண்களின் சிமென்ட் பூச்சு இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வப்போது சிமென்ட் பூச்சு விழுவதால் மக்கள் பாதுகாப்பு கருதி மக்கள் வெட்டவெளியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.