கலவர வழக்கில் 3,036 வங்கதேச வீரர்களுக்கு சிறை
கலவர வழக்கில் 3,036 வங்கதேச வீரர்களுக்கு சிறை
கலவர வழக்கில் 3,036 வங்கதேச வீரர்களுக்கு சிறை
UPDATED : செப் 13, 2011 03:47 PM
ADDED : செப் 13, 2011 01:13 PM
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த ராணுவவீரர்களிடையேயான கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்ற எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 36 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நடந்த விசாரணையில் 182 எல்லைபாதுகாப்புப்படை வீரர்களுக்கு சிறப்பு கோர்ட் சிறைதண்டனை வழங்கியது. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் வங்கதேசத்தின் இந்திய- மியான்மர் எல்லைப்பகுதியில், வங்கதேச எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் வங்கதேச ரைபிஸ்ப்படையின் மேஜர் ஜெனரல் ஷாகில் அகமது உள்பட 57 பேர் பாராமிலிட்டரி ராணுவ உயர் அதிகாரிகள் ஆவார். இதில் தொடர்புடைய எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
77 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களின் மீதான விசாரணை கடந்த ஆக.24-ம் தேதி துவங்கியது.இதன் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் சிறிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 4 மாதங்கள் வரையும், பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் வரையும், 1.43 டாலர் (100 டாக்கா) அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 36 எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச பாராமிலிட்டரி ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.