Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு

திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு

திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு

திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு

ADDED : ஜூலை 31, 2011 03:21 AM


Google News
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (30ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறப்பு 6.30க்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயனநரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

7 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள் பூவாலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், உள்புறப்பாடும் நடந்து சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரு மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு சாயரட்சை, நட்சத்திர பூஜையும், இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us