/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிராமங்களுக்கு முகவரி மாற்றம் : புது வாக்காளர் சேர்த்தல் நிறுத்தம்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிராமங்களுக்கு முகவரி மாற்றம் : புது வாக்காளர் சேர்த்தல் நிறுத்தம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிராமங்களுக்கு முகவரி மாற்றம் : புது வாக்காளர் சேர்த்தல் நிறுத்தம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிராமங்களுக்கு முகவரி மாற்றம் : புது வாக்காளர் சேர்த்தல் நிறுத்தம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிராமங்களுக்கு முகவரி மாற்றம் : புது வாக்காளர் சேர்த்தல் நிறுத்தம்
ADDED : செப் 15, 2011 09:19 PM
சிவகாசி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தால், கிராமங்களுக்கு இடம்மாறுபவர்களை தடுக்கும் வகையில், புதிய வாக்காளர் சேர்த்தல் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆசையில், பலரும் இடம்மாறி வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது அதிகரித்து உள்ளது. நகர்பகுதியில் உள்ளவர்கள் கிராமங்களில் உள்ள பழைய முகவரிக்கு மாறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தேர்தலுக்காக முகவரி மாற்றி, கிராமங்களுக்கு வருவோரை உள்ளூர்வாசிகள் ஏற்காத மனநிலையில் உள்ளனர். 'தேர்தலுக்காக முகவரி மாற்றம் செய்பவர்களை அனுமதிக்க கூடாது,' என, அதிகாரிகளிடமும் புகார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, புது வாக்காளர் சேர்த்தல் தொடர்பாக, 'செப்.,10 வரை பெறப்பட்ட மனுக்கள் மட்டும் ஏற்று, ஆன் - லைன் பதிவு செய்து அனுப்ப,' தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி செப்.,10 க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள், ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாதபடி லாக் செய்யப்பட்டுள்ளது. 10ம்தேதி வரை பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல்,திருத்தம், மாற்றம் குறித்த மனுக்களை பரிசீலனை செய்து, இம்மாத இறுதியில் இறுதி பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.