/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மீண்டும் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி சங்கரன்கோவிலில் போலீசார் தீவிர விசாரணைமீண்டும் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி சங்கரன்கோவிலில் போலீசார் தீவிர விசாரணை
மீண்டும் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி சங்கரன்கோவிலில் போலீசார் தீவிர விசாரணை
மீண்டும் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி சங்கரன்கோவிலில் போலீசார் தீவிர விசாரணை
மீண்டும் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி சங்கரன்கோவிலில் போலீசார் தீவிர விசாரணை
ADDED : செப் 17, 2011 02:50 AM
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு மீண்டும் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.சங்கரன்கோவில் அருகே சோலைசேரி கிராமம் உள்ளது.
கடந்த 13ம் தேதி சோலைசேரி அருகில் உள்ள தேவி ஆறு மீது செல்லும் ரயில்வே பாலத்தின் மீது மர்ம ஆசாமிகள் கான்கிரீட் சிலிப்பரை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரயில்வே ஐ.ஜி., சுனில்குமார், எஸ்.பி., தமிழ்சந்திரன், விருதுநகர் எஸ்.பி., நஜ்மல்கோடா ஆகியோர் பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க முயற்சி நடந்த தேவி ஆற்று பாலத்தை பார்வையிட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் நேரத்திற்கு முன்பாக சங்கரன்கோவில் அருகே இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறாங்கற்களை அகற்றினர். இதனை தொடர்ந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி சென்றது.இரண்டாவது முறையாக ரயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார், என்ன காரணத்திற்காக ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.