ADDED : செப் 16, 2011 10:01 PM
ஆனைமலை : ஆனைமலை அருகே விவசாய தோட்டத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு அவ்வப்போது வன உயிரினங்கள் ஊடுருவி வருகின்றன. சேத்துமடை, சர்க்கார்பதி பீட்டர் கால்வாயை ஒட்டியுள்ள ராஜாராம் என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. அதிக அளவில் தென்னை மரங்களின் குறுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து வயது வரை உள்ள தென்னை
மரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் விவசாயப் பயிர்களை வன விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.