/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் : இலவசங்களால் தள்ளிப்போகும்நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் : இலவசங்களால் தள்ளிப்போகும்
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் : இலவசங்களால் தள்ளிப்போகும்
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் : இலவசங்களால் தள்ளிப்போகும்
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் : இலவசங்களால் தள்ளிப்போகும்
ADDED : ஆக 25, 2011 11:06 PM
திண்டுக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் செப்., 15 ல் வழங்கப்பட உள்ளதால், அதன் பிறகே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அக்., 23 ல், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிகிறது. அக்., 15 க்குள் தேர்தல் நடத்தினால் தான், புதியவர்கள் பொறுப்பேற்க வேண்டும். உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடியும் முன், தேர்தலை நடத்தி முடிக்க, செப்., 15 க்குள் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்து விடும். அதன்பிறகு இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற நலத்திட்டங்கள் வழங்க முடியாது. செப்., 15 க்கு பின் தேர்தல் அறிவித்தால், அக்., 23 க்குள் புதியவர்கள் பொறுப்பேற்க அவகாசம் இல்லை. இதனால் தேர்தல், ஒரு மாதம் தள்ளிப்போகும் நிலை உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் அக்., 23 ல் பதவி இழக்கும் நிலையில், தனி அலுவலர்கள் நிர்வாகம் செய்யலாம். அதன்பின், நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.