பெண் உரிமை இசை ஆல்பம்: திருநங்கை ரோஸ் தீவிரம்
பெண் உரிமை இசை ஆல்பம்: திருநங்கை ரோஸ் தீவிரம்
பெண் உரிமை இசை ஆல்பம்: திருநங்கை ரோஸ் தீவிரம்
ADDED : செப் 17, 2011 11:08 PM

சென்னை: ''பெண்களின் உரிமைகளை, இசை மூலமாக வெளிப்படுத்த உள்ளேன்,'' என்று திருநங்கை ரோஸ் கூறினார்.
திருநங்கை ரோஸின், 'சாக்லேட்ரோஸஸ்' என்ற மியூசிக் ஆல்பத்தின் தயாரிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, நிருபர்களிடம் ரோஸ் கூறியதாவது: மேலை நாடுகளில், 'பாப்' குழுக்கள், இசையை பரப்பி வருகின்றன. வெளி நாடுகளில், இசைக்கு என்றே தனியாக துறை உள்ளது. இந்தியாவில், இசை என்றவுடன் சினிமாதான் மக்களின் நினைக்கு வருகிறது. பெண்களின் உரிமைகளை, இசை மூலமாக வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த ஆல்பத்தை தயாரிக்க உள்ளேன். தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், இந்த ஆல்பத்தை வெளியிட உள்ளேன். இந்த ஆல்பத்திற்கு, நானே பாடல்கள் எழுதி, இசை அமைத்துள்ளேன். இந்தியாவில், முதன் முதலாக பாப் இசைக் குழுக்கள் மூலம், இசை ஆல்பம் தயாரிக்கும் முதல் திருநங்கை நான் தான். அகில உலக பாப் இசைப்பாடகியாக வருவது என்னுடைய லட்சியம். இவ்வாறு ரோஸ் கூறினார்.