/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாகன டிரைவர்களுக்கு வந்து சேர்ந்தது பயணப்படிவாகன டிரைவர்களுக்கு வந்து சேர்ந்தது பயணப்படி
வாகன டிரைவர்களுக்கு வந்து சேர்ந்தது பயணப்படி
வாகன டிரைவர்களுக்கு வந்து சேர்ந்தது பயணப்படி
வாகன டிரைவர்களுக்கு வந்து சேர்ந்தது பயணப்படி
ADDED : ஆக 21, 2011 11:53 PM
பேரூர் : சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு,
அரசு வாகன டிரைவர்களுக்கான பயணப்படி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம்
நடந்த சட்டசபை தேர்தலிலின்போது, தொண்டாமுத்தூர் தொகுதியில் 10 அரசு
அதிகாரிகள், தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், துணை வட்டார
வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், கால்நடை
பராமரிப்புத்துறை இணை இயக் குநர், மாவட்ட நூலக கண்காணிப்பாளர், கூட்டுறவு
துணைப்பதிவாளர் உள்பட 10 அதிகாரிக்கு, தேர்தல் அவசர பணிக்காக, 10
டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு, பல வாரம் வாகனம் ஓட்டினர். தொண்டாமுத்தூர்
ஒன்றியம் (இருவர்), குடிநீர் வாரியம் (ஒருவர்), சிறுசேமிப்பு பிரிவு
(ஒருவர்), நெடுஞ்சாலைத்துறை (ஒருவர்) என வெவ்வேறு துறைகளிலிருந்து 10
டிரைவர்கள் வாகனம் ஓட்டும் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுற்று, ஓரிரு
நாட்களிலே, அலுவலராக பணியாற்றியவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட்டது; ஆனால்,
டிரைவர்களுக்கு மட்டும் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. இது குறித்து,
'பட்ஜெட்டும் வந்தாச்சு! துட்டு மட்டும் இன்னும் வரலே' என்ற தலைப்பில்
தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வாகன டிரைவர்களுக்கான
பயணப்படியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.


