/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இடி தாக்கியதில் இருவர் உடல் கருகியதுஇடி தாக்கியதில் இருவர் உடல் கருகியது
இடி தாக்கியதில் இருவர் உடல் கருகியது
இடி தாக்கியதில் இருவர் உடல் கருகியது
இடி தாக்கியதில் இருவர் உடல் கருகியது
ADDED : ஆக 19, 2011 11:20 PM
தர்மபுரி: தர்மபுரி அருகே இடி தாக்கியதில் இருவர் உடல் கருகி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையம் ஜாலிநரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்.
இவரது மகன்கள் ஹரி (15), துரை (31) இருவரும் நேற்று முன்தினம் மாலை லேசான
மழை தூரலில் வீட்டின் மேல் பகுதியில் டிஸ் ஆண்டனா பொருத்தி
கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென இடி தாக்கியதில் டிஸ் ஆண்டனா வெடித்து
சிதறியது. மேலும் இருவரின் உடலும் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதிகோன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


