ADDED : செப் 28, 2011 12:44 AM
பெருந்துறை:பெருந்துறை யூனியனில் உள்ள 6 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 29
பஞ்சாயத்துக்களில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணும் மையத்தை கலெக்டர் காமராஜ்
ஆய்வு செய்தார்.பெருந்துறை யூனியனில் உள்ள பெருந்துறை,
கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம்,
நல்லாம்பட்டி ஆகிய ஆறு டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவாகும் ஓட்டுகள்
பெருந்துறை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் எண்ணப்படுகிறது.பெருந்துறை
யூனியனில் உள்ள 12 வார்டுகள் மற்றும் 29 பஞ்சாயத்துக்களில் பதிவாகும்
ஓட்டுகள் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
எண்ணப்படுகிறது.ஓட்டுகள் எண்ணும் இரண்டு மையங்களையும் கலெக்டர் ஆய்வு
செய்து, மேற்கொள்ளும் பாதுகாப்புகளைப் பற்றி அதிகாரிகளுக்கு ஆலோசனை
வழங்கினார்.
பெருந்துறை டி.எஸ்.பி., குணசேகரன், இன்ஸ்பெக்டர் குணசேகரன்
மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.