ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
திண்டிவனம் : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில செயலாளர் வேணு கோபால் தேர்தலை நடத்தினார். தலைவராக ரங்கநாதன், செயலாளராக முல்லைவேந்தன், பொருளாளராக திருமாறன், மாவட்ட துணை தலைவராக செல்ல துரை, இணை செயலாளராக பலராமன், அமைப்பு செயலாளராக சம்பத், பிரசார செயலாளராக ராஜவேல், துணை செயலாளர்களாக அனந்த குமார், கமலக்கண்ணன், சந்திர சேகர், மணி, மாவட்ட செய்தி தொடர்பளராக பாபு சம்பத் தேர்வாகினர். புதிய நிர்வாகிகளை சங்க நிறுவனர் துரை ராஜமாணிக்கம், மாநில துணை தலைவர் மனோகரன், சங்க ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் அனைவரும் கலெக்டர் மணிமேகலை, டி.ஆர்.ஓ., வெங்கடாச்சலத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.