/உள்ளூர் செய்திகள்/கரூர்/சிறுநீரக கல்லையும் மழை நீர் கரைக்கும்: கருத்தரங்கில் தகவல்சிறுநீரக கல்லையும் மழை நீர் கரைக்கும்: கருத்தரங்கில் தகவல்
சிறுநீரக கல்லையும் மழை நீர் கரைக்கும்: கருத்தரங்கில் தகவல்
சிறுநீரக கல்லையும் மழை நீர் கரைக்கும்: கருத்தரங்கில் தகவல்
சிறுநீரக கல்லையும் மழை நீர் கரைக்கும்: கருத்தரங்கில் தகவல்
ADDED : ஆக 11, 2011 02:43 AM
தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் பொதுப்பணித்துறை (ஓய்வு) பொறியாளர் திருவாரூரைச் சேர்ந்த வரதராசன் பேசியதாவது: 'நீரின்றி அமையாது உலகு', வருங்கால நம் சந்ததியர்க்கு பணத்தை விட நீரை சேமித்து வைப்பதே நல்லது. வீட்டில் மழை நீரை சேமித்தால் வீதியில் குடிநீருக்கு அலைய வேண்டியதில்லை. ஐ.நா.வின் 122 நாடுகளில் கிடைக்க கூடிய தரமான குடிநீர் பற்றிய ஆய்வில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது. மழைநீர் சிறுநீரகக்கல்லையும் கரைத்து விடும் தன்மை கொண் டது. மழைநீர் சேமிப்பு இன்றைய தேவைக்கும், நிலத்தடி நீர் சேமிப்பு நாளை தேவைக்கும் உதவும். 'எனது தாத்தா தண்ணீரை வெள்ளமாக பார்த்தார். எனது தந்தை ஊற்று நீராக பார்த்தார். நான் குழாய் நீராக பார்க்கிறேன். எனது பையன் பிளாஸ்டிக் பைகளில் பார்க்கிறான். எனது பேரன் எப்படி பார்ப்பானோ? என்ற எண்ணம் தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் குமரன், செயலாளர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.