சென்னை மாநகராட்சி 39, 42வது வார்டுகளுக்கு புதிய வேட்பாளர்
சென்னை மாநகராட்சி 39, 42வது வார்டுகளுக்கு புதிய வேட்பாளர்
சென்னை மாநகராட்சி 39, 42வது வார்டுகளுக்கு புதிய வேட்பாளர்
ADDED : செப் 28, 2011 11:50 PM
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வின் சென்னை, கடலூர் மேற்கு, மதுரை புறநகர் உள்ளிட்ட சில வார்டுகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 39 வார்டுக்கு சசிகலாவும், 42வது வார்டுக்கு வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலர் அஞ்சுலட்சுமியும் புதிய வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியின் 44வது வார்டுக்கு, வார்டு கழகச் செயலர் நஜ்முதீனும், 45வது வார்டுக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலர் மருதமலை சம்பத்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு இளம்பெண்கள் பாசறை செயலர் கீதா பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மேற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றியம் 26வது வார்டுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.