Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இருபுறமும் திறக்கும் ரெப்ரிஜிரேட்டர் கோவையில் ஷார்ப் நிறுவனம் அறிமுகம்

இருபுறமும் திறக்கும் ரெப்ரிஜிரேட்டர் கோவையில் ஷார்ப் நிறுவனம் அறிமுகம்

இருபுறமும் திறக்கும் ரெப்ரிஜிரேட்டர் கோவையில் ஷார்ப் நிறுவனம் அறிமுகம்

இருபுறமும் திறக்கும் ரெப்ரிஜிரேட்டர் கோவையில் ஷார்ப் நிறுவனம் அறிமுகம்

ADDED : செப் 29, 2011 01:49 AM


Google News

கோவை : ஜப்பான் நிறுவனமான 'ஷார்ப்' எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்களின் அறிமுக விழா, டீலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது.

இந்திய பகுதிக்கான தலைமை செயல் இயக்குனர் டாமியோ இசகை பேசியதாவது: ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், மைக்ரோ, ஸ்டீம் ஓவன், ஏர் கண்டிஷனர், மொபைல் போன், சோலர் செல்கள், எல்இடி 'டிவி' போன்றவற்றை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த பொருட்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெப்ரிஜிரேட்டர், இருபுறமும் திறக்கும் வகையிலான கதவுகளை கொண்டுள்ளது. இடது, வலது புறங்களில் இதை எளிதாக திறக்கலாம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த எல்இடி விளக்குகளை அறிமுகம் செய்துள்ளது. சூரிய ஒளியிலிருந்து மின் சக்தியை தயார் செய்து, பயன்படுத்தும் சாதனைகளையும் செய்து வருகிறது. குஜராத்தில் இந்த நிறுவனம் 50 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகளின் கூரைகளில் இருந்து மின்சாரம் தயார் செய்ய சோலார் செல்களை உருவாக்கி வருகிறது. சமையலறை சாதனங்களில், மைக்ரோ வேவ் ஓவன் மட்டுமின்றி, அதனுடன் கூடிய ஸ்டீம் வேவ் ஓவனையும் உருவாக்கியுள்ளது. இந்த ஓவினில், காய்கறிகளை சத்து குறையாமல் வேக வைக்க முடியும். இவ்வாறு, டாமியோ இசகை தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us