/உள்ளூர் செய்திகள்/தேனி/மக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடைமக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை
மக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை
மக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை
மக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை
ADDED : அக் 01, 2011 09:53 PM
கம்பம் : மக்கள் நலப்பணியாளர்களை 'அடையாளம்' காட்டும் அலுவலராக ஈடுபடுத்த கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மக்கள் நலப்பணியாளர் உள்ளனர். இவர்களின் பணி அரசின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமாகும். நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுச் சாவடிகளில் வசதிகள் செய்தல், வாக்காளர்களை அடையாளம் காட்டும் பணி செய்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த ஊரக வளர்ச்சி அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,'கிராம ஊராட்சிகளில் மக்கள் நலப்பணியாளர்களை ஓட்டுச்சாவடிகளில் 'அடையாளம்' காட்டும் அலுவலராகவோ அல்லது வேறு தேர்தல் தொடர்பான எந்த பணிக்கும் பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது' என்றும் கூறப்பட்டுள்ளது.


