ADDED : அக் 12, 2011 01:55 AM
நாமக்கல்: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கணவர் தீக்குளித்து தற்கொலை
செய்து கொண்டார்.குருசாமிபாளையம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்தவர் கூலித்
தொழிலாளி செல்வராஜ் (30). அவரது மனைவி கவிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதில் மனமுடைந்த கவிதா, பெற்றோர் வீட்டுக்கு
சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த செல்வராஜ், 8ம் தேதி
வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அதில் படுகாயமடைந்த செல்வராஜ், சேலம் அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக, புதுச்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.


