இளம்பெண் திருமணம்நிறுத்திய அதிகாரிகள்
இளம்பெண் திருமணம்நிறுத்திய அதிகாரிகள்
இளம்பெண் திருமணம்நிறுத்திய அதிகாரிகள்
ADDED : செப் 11, 2011 12:51 AM
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், 'மைனர்' பெண்ணுக்கு நடக்க இருந்த
திருமணத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.தம்மம்பட்டி,
நடுவீதி பகுதியை ÷
சர்ந்தவர் தர்மர் மகள் பிரியதர்ஷினி (17). அவருக்கும், தலைவாசல் அருகே உள்ள
வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் மணி (25) என்பவருக்கும்
திரும
ணம் செய்வதாக, இருவீட்டு பெற்றோர்கள் முடிவு செய்தனர்.அதற்கான திருமண
அழைப்பிதழ்களை உறவினர்கள் உள்ளிட்ட நண்பர்களுக்கு வழங்கி வந்தனர். இந்நி
லையில், மணப்பெண்ணுக்கு, 18 வயது முடியாமல் திருமணம் செய்தவதாக,
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் விஸ்வநாதனுக்கு புகார்
சென்றது.
அதன்பேரில், கெங்கவல்லி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு திட்ட
ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தம்மம்பட்டி கிராம வி.ஏ.ஓ., தேவதுரை ஆகியோர்
ஆய்வு செய்து,
மணப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், திருமண பெண்
பிரியதர்ஷினிக்கு, 17 வயது முடிந்து மூன்று மாதங்கள் நடந்து வருவது தெரியவந்தது. அதையடுத்து, பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியடைந்த பின் திருமணம்
செய்து வைக்கும்படி பெண்ணின் பெற்றோரை எச்சரித்தனர்.அதையடுத்து, வரும் 14ம்
தேதி நடக்க இருந்த பெண் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 'மைனர்'
பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.