/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெற்றி பெரும் இடங்களில்போட்டி: உ.உ.க., அறிவிப்புவெற்றி பெரும் இடங்களில்போட்டி: உ.உ.க., அறிவிப்பு
வெற்றி பெரும் இடங்களில்போட்டி: உ.உ.க., அறிவிப்பு
வெற்றி பெரும் இடங்களில்போட்டி: உ.உ.க., அறிவிப்பு
வெற்றி பெரும் இடங்களில்போட்டி: உ.உ.க., அறிவிப்பு
ADDED : செப் 19, 2011 01:15 AM
தாராபுரம்:''தமிழகத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் போட்டியிடும்.
ஊழல் அற்ற, நேர்மையான,
வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துவோம்,'' என கட்சியின் தலைவர் செல்லமுத்து
கூறினார்.தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உழவர்
உழைப்பாளர் கட்சி உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள
பகுதிகளில் தனித்து போட்டியிடும். விவசாயிகளின் பிரச்னைகளையும், பொது
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும். ஊழல் அற்ற,
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தும்.சின்ன வெங்காயம்
ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல துறைமுகம் வரை
சென்ற வெங்காயம் திரும்பி அந்தந்த பகுதிக்கே வந்துள்ளது. வெங்காய
விவசாயிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று டெல்லி
சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷை சந்தித்து வெங்காய
ஏற்றுமதிக்கு தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.தி.மு.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அவர்கள் அழைத்தால் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.