/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உப்புத்தன்மையுடன் குடிநீர்; வீடுகளில் புகும் கழிவுநீர்உப்புத்தன்மையுடன் குடிநீர்; வீடுகளில் புகும் கழிவுநீர்
உப்புத்தன்மையுடன் குடிநீர்; வீடுகளில் புகும் கழிவுநீர்
உப்புத்தன்மையுடன் குடிநீர்; வீடுகளில் புகும் கழிவுநீர்
உப்புத்தன்மையுடன் குடிநீர்; வீடுகளில் புகும் கழிவுநீர்
ADDED : செப் 03, 2011 12:16 AM
நரிக்குடி ஒன்றியம் உளுத்திமடை ஊராட்சியை சேர்ந்தது உளுத்திமடை கிழக்கு காலனி.
இங்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கிடைக்கிற குடிநீரும் உப்புத்தன்மையுடன் உள்ளது. செங்கமடையிலிருந்து வரும் குடிநீர் பைப் உடைந்து, இரண்டு மாதமாகியும் சரிசெய்ய வில்லை. திருப்பாச்சேத்தி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் வந்தது. அந்த தண்ணீரும் தற்போது இல்லை. இதனால் நல்ல நீருக்காக 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுவும் மழைக் காலங்களில் மட்டுமே கிடைக்கும். இரண்டு தெருவில் மட்டுமே சிமென்ட் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற தெருக்களில் போடவில்லை. முறையான வாறுகால் இல்லாததால் , மழைநீர் மற்றும் கழிவுநீர் அனைத்தும் தெருவில் ஓடி ,வீட்டினுள் புகுகிறது. ஒரு ஆண்டாக தெருவிளக்குகள் எரியவில்லை. காலனி வீடுகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகியும், அனைத்து வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழை பெய்தால் வீட்டிற்குள் குடை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இங்குள்ளளோர் பஸ்டாப் , ரைஸ் மில்லில் தூங்குகின்றனர். இது தொடர்பாக இப்பகுதியினரின் குமுறல்கள் இதோ
முத்துப்பாண்டி: குடிநீர் கிடைத்து பல மாதமாகி விட்டது. செங்கமடையிலிருந்து வந்த குடிநீரும் தற்போது வரவில்லை. திருப்பாசசேத்தி குடிநீரும் இரண்டு ஆண்டுகளாக வரவில்லை. தியாகராஜன்: தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. எப்போதும் இடிந்து விழலாம். சமீபத்தில் பெய்த மழையில், வீட்டின் மேற்கூரை இடிந்து, குழந்தையின் கை முறிந்து விட்டது.பஞ்சவர்ணம்: சமுதாய கூடம் இல்லாமல், திருமணம் போன்ற விஷேசங்களை நடத்த, திருச்சுழி , மானாமதுரை செல்ல வேண்டியுள்ளது. சித்திரைவேல்: சிமென்ட் ரோடு முறையாக போடப்பட வில் லை. வாறுகால் அமை க்காததால், மழைநீர் மற்றும் கழிவுநீர் அனைத்தும் தெருக்களுக்குள் தேங்கி வீட்டிற்குள் புகுகிறது. காலனியிலிருந்து உளுத்திமடை செல்லும் இணைப்பு பாதை முட்புதராக உள்ளது.


