/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாத இறுதியில் சம்பளம் வேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைமாத இறுதியில் சம்பளம் வேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
மாத இறுதியில் சம்பளம் வேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
மாத இறுதியில் சம்பளம் வேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
மாத இறுதியில் சம்பளம் வேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
ADDED : ஆக 07, 2011 01:53 AM
கரூர்: அரசு உத்தரவின்படி கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியமும், மாதந்தோறும் 10ம் தேதி உணவீட்டு செலவினமும் வழங்கவேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் வேம்புசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியமும், மாதந்தோறும் 10ம் தேதி உணவீட்டு செலவினமும் வழங்கவேண்டும். குறைவான குழந்தைகளை காரணம் காட்டி சத்துணவு மையங்களை மூடுவது மற்றும் துணை மையங்களுக்கு மற்ற மையங்களிலிருந்து உணவு கொண்டு செல்வதை தடுப்பதை தவிர்க்க வேண்டும். மையல் உதவியாளர்களுக்கு காலியாக உள்ள சமையலர் பணியிடங்களில் சமயலராக பதவி உயர்வு வழங்குதல், பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் அங்கமுத்து, மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பழனியம்மாள், மாவட்ட இணைச் செயலாளர்கள் பழனி, செல்வராஜ், ஒன்றிய தலைவர்கள் சுப்பிரமணியன், பிச்øகாரன், பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.