Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/டெல்டா மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி' புதுகை, அரியலூர், பெரம்பலூர் : தஞ்சை மாவட்டத்தில் துவக்கம்

டெல்டா மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி' புதுகை, அரியலூர், பெரம்பலூர் : தஞ்சை மாவட்டத்தில் துவக்கம்

டெல்டா மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி' புதுகை, அரியலூர், பெரம்பலூர் : தஞ்சை மாவட்டத்தில் துவக்கம்

டெல்டா மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி' புதுகை, அரியலூர், பெரம்பலூர் : தஞ்சை மாவட்டத்தில் துவக்கம்

ADDED : செப் 03, 2011 12:30 AM


Google News

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை, புதுகை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒளிபரப்பு சேவை துவக்கி வைக்கப்பட்டது. தஞ்சையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் இயக்கி வைத்து பேசுகையில், ''அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்ப தீர்மானம் 2005ம் ஆண்டிலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பல நகரங்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு அளித்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்,'' என்றார். விழாவில், கலெக்டர் பாஸ்கரன், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரெங்கசாமி, பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு, திருவையாறு எம்.எல்.ஏ., ரெத்தினசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கிரிராஜன் நன்றி கூறினார்.



* புதுக்கோட்டையில் நடந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பு சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் துவக்கிவைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைந்த கட்டணத்தில் அதாவது மாதம் 70 ரூபாய்க்கு கேபிள் 'டிவி' வசதி பெறும் விதமாக அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பு சேவையை துவக்கி வைத்ததில் பெருமையடைகிறேன். இந்த சேவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜநாயகம், விஜயபாஸ்கர், வைரமுத்து, கு.ப.கிருஷ்ணன், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமைய்யா, நகரச் செயலாளர் பாஸ்கர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.



* பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் நடந்த நிகழ்ச்சியில் கேபிள் 'டிவி' ஒளிபரப்பை கலெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது: இன்று (நேற்று) முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கேபிள் டிவி இணைப்பு உள்ளவர்களுக்கு 55 இலவச சேனல்கள் வழங்கப்படுகிறது. விரைவில் கட்டண சேனல்கள், உள்ளூர் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் காணவும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு இன்று முதல் மாவட்டத்திலுள்ள 70 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் வீடுகளில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி., இளவரசன், எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், மாவட்ட போலீஸ் எஸ்.பி., ரூபேஸ்குமார் மீனா, ஆர்.டி.ஓ., ரேவதி, தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



* அரியலூர் மாவட்டத்துக்கான அரசு கேபிள் 'டிவி' துவக்க விழா, அரியலூர் சிவம் காம்ப்ளக்ஸில் நேற்று நடந்தது. அரியலூரில் நடந்த விழாவில் கலெக்டர் அனு ஜார்ஜ், எம்.எல்.ஏ., துரை மணிவேல் முன்னிலை வகித்தனர். அரசு கேபிள் துவக்க விழாவில் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் மாவட்ட பொறுப்பாளர் மாணிக்கராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கர வடிவேல், ஜெயங்கொண்டம் ராஜ் கேபிள் செல்வராஜ், அரியலூர் மெட்ரோ கேபிள் நிர்வாகி நாகராஜ், ஜெம் டி.வி., கண்ணன், எழில், கார்த்திகேயன், அன்பரசன், சரவணன், நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us