/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலாதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா
ADDED : ஆக 03, 2011 10:43 PM
குன்னூர் : காட்டேரி தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானை உட்பட இரு பெரிய யானைகள் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. தேயிலை தோட்ட குடியிருப்புகளில் வளர்ந்துள்ள வாழை மரங்களை யானைகள் ருசி பார்த்து வந்தன. யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறை அறிவுரையின்படி,வாழை மரங்கள் வெட்டப்பட்டன. எனினும், யானைகள் நடமாட்டம் குறையவில்லை. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை ரேஞ்சர் பால்ராஜ் கூறுகையில், ''தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் காட்டு யானைகளில் குட்டியின் வயது மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும். குட்டி யானைக்கு உணவு சேகரித்து கொடுக்கவும், அவற்றை பாதுகாப்பதிலும் தான் பெரிய யானைகள் ஆர்வம் காட்டுகின்றன. அவை மக்களுக்கு இடையூறு கொடுப்பதில்லை. அதிக வெடி சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்து அவற்றை விரட்டாமல், தகர டப்பா, காலி நீர் பாட்டில்களை தட்டி ஒலியெழுப்பி, யானைகளை விரட்டி வருகிறோம்,'' என்றார்.