/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பட்டப்பகலில் 2.50 லட்சம் கொள்ளை 24 மணி நேரத்தில் மடக்கிய போலீசார்பட்டப்பகலில் 2.50 லட்சம் கொள்ளை 24 மணி நேரத்தில் மடக்கிய போலீசார்
பட்டப்பகலில் 2.50 லட்சம் கொள்ளை 24 மணி நேரத்தில் மடக்கிய போலீசார்
பட்டப்பகலில் 2.50 லட்சம் கொள்ளை 24 மணி நேரத்தில் மடக்கிய போலீசார்
பட்டப்பகலில் 2.50 லட்சம் கொள்ளை 24 மணி நேரத்தில் மடக்கிய போலீசார்
ADDED : ஆக 03, 2011 10:43 PM
குன்னூர் : குன்னூர் அருவங்காடு காரக்கொரை பகுதியில் வசிப்பவர் பாலசுப்ரமணி (59); அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பாதுகாப்புப் பிரிவில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
அவரது மனைவி சுமத்ரா; வெலிங்டன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இரு நாளுக்கு முன் இவர்கள் இருவரும் பணிக்கு சென்றுள்ளனர். மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த பாலசுப்ரமணி, வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறை வென்டிலேட்டர் மற்றும் கதவு திறந்திருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15.5 சவரன் நகை, டி.வி.டி., உட்பட 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அருவங்காடு காவல் நிலையத்தில் பாலசுப்ரமணிபுகார் கொடுத்தார். எஸ்.பி., நிஜாமுதீன் உத்தரவின்படி, டி.எஸ்.பி.,க்கள் மாடசாமி, அசோக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இது தொடர்பாக, கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (29) என்பவரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மனோகரன், கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.