ADDED : ஆக 09, 2011 01:14 AM
வெம்பக்கோட்டை : தாயில்பட்டி அருகே எரவார்பட்டியை சேர்ந்த உலகநாதன் மகன் சுந்தர்ராஜ்.
இவருக்கு சொந்தமான டிராக்டர் சுப்ரமணியபுரம் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்தது. வெம்பக்கோட்டை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
* சிவகாசி எதிர்கோட்டை ஆர்.ஐ., ஜெயராமன், குண்டாயிருப்பு மெயின் ரோட்டில் தலையாரிகளுடன் மணல் கடத்தல் தடுப்புசோதனை செய்தார். வெம்பக்கோட்டை அணை உள்பகுதியில் அனுமதியின்றி திருட்டு மணல் ஏற்றி வந்த இரு டிராக்டர்களை பிடித்தனர். டிராக்டர் டிரைவர்கள் கே.லட்சுமியாபுரத்தை சேர்ந்த சின்னத்தம்பி(29) கண்டியாபுரத்தை சேர்ந்த முனியாண்டி(20) ஆகியோரை ஆலங்குளம் போலீசார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.
தாய்க்கு மிரட்டல்


