/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குடிபோதையில் கிண்டல் 2 வாலிபர்கள் கைதுகுடிபோதையில் கிண்டல் 2 வாலிபர்கள் கைது
குடிபோதையில் கிண்டல் 2 வாலிபர்கள் கைது
குடிபோதையில் கிண்டல் 2 வாலிபர்கள் கைது
குடிபோதையில் கிண்டல் 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 30, 2011 12:06 AM
பள்ளிபாளையம்: குடிபோதையில் பெண்களை கேலி, கிண்டல் செய்த இரண்டு வாலிபர்களை, பள்ளிபாளையம் போலீஸார் கைது செய்தனர்.பள்ளிபாளையம் அடுத்த களியனூரை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (35), ரவிச்சந்திரன் (35).
நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு டாஸ்மாக் மதுபானக்கடையில் குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், அவ்வழியாக சென்ற பெண்களை ஆபாசமாக பேசியும், கேலியும், கிண்டலும் செய்தனர்.இது குறித்து பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீஸார், குடிபோதையில் ஆபாசமாக பேசியபடி, பெண்களை கேலி, கிண்டல் செய்த நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.