ADDED : ஜூலை 29, 2011 01:37 AM
மதுரை : மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த நீச்சல் போட்டியில் செயின்ட் மைக்கேல் பள்ளி முதலிடம் பெற்றது.
100 மீட்டர் ப்ரீஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை போட்டியில் முதலிடம் பெற்ற கோவிந்த் சக்ரவர்த்தி, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 100 மீட்டர் ப்ரீஸ்டைல், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை போட்டியில் முதலிடம் பெற்ற தரணிதரன், தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் யோகன் முதலிடம், ப்ரீஸ்டைல், பட்டர்பிளையில் இரண்டாமிடம், அபிஷேக் 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் இரண்டாமிடம், ப்ரீஸ்டைல், பட்டர்பிளையில் மூன்றாமிடம் பெற்றார். மாணவர்கள் 75 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். பள்ளித் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தாளாளர் பிரிட்ஜிட் நிர்மலா, முதல்வர் மதிவதணன் பாராட்டினர்.
திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளி மாணவர்கள் 58 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றனர். சபரி, ஹேமந்த், தேவதர்ஷினி, ஷயானி ஜெயின், ரமாஸ்ரீ, ஸ்ருதி, சஞ்சய், கபிலன், ஹரிதா, சூரியா, தங்கபிரசன்னா, சைலேந்தர், நவீன், யசூ ஜெயின் வெற்றி பெற்றனர். பள்ளி முதல்வர் அனிதா, பயிற்சியாளர் சுரேஷ் பாராட்டினர்.