/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெரியார் பல்கலை மூலம் 449 பேருக்கு வேலைபெரியார் பல்கலை மூலம் 449 பேருக்கு வேலை
பெரியார் பல்கலை மூலம் 449 பேருக்கு வேலை
பெரியார் பல்கலை மூலம் 449 பேருக்கு வேலை
பெரியார் பல்கலை மூலம் 449 பேருக்கு வேலை
சேலம்: சேலம், பெரியார் பல்கலையில், பல்கலை மானியக்குழு சார்பில், வழங்கப்பட்ட, 27 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் வேலை வாய்ப்பு மையம் துவக்கப்பட்டது.
ஒவ்வொரு கல்லூரியிலும், வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர். பெரியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து, 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்கலை மானியக்குழு சார்பில், 27 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் பெரியார் பல்கலையில், வேலை வாய்ப்பு மையம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'டிவிடி' கேஸட் மூலம் வேலை வாய்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டாட்டா கன்சல்டன்ஸி நிறுவனத்தில், 449 மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சிறப்பான முறையில் அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற, 20 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், மாணவ, மாணவியர் தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுப்பது குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


