/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதல் : பெண் பலி; 7 பேர் படுகாயம்பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதல் : பெண் பலி; 7 பேர் படுகாயம்
பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதல் : பெண் பலி; 7 பேர் படுகாயம்
பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதல் : பெண் பலி; 7 பேர் படுகாயம்
பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதல் : பெண் பலி; 7 பேர் படுகாயம்
ADDED : செப் 01, 2011 11:53 PM
பணகுடி : பணகுடி அருகே ஆட்டோ-வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். திருக்குறுங்குடி நம்பிகுறிச்சியை சேர்ந்தவர் தர்மகண்ணு மனைவி சுடர் மணி (55). சம்பவத்தன்று இவரும், அதே பகுதியை சேர்ந்த ருக்மணி (50), நாச்சியார் (45), அய்யப்பன் (25), மந்திரம் (45), சித்ரா (18), சுந்தர் (40) ஆகியோர் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் உள்ள செங்கல்சூளைக்கு கூலி வேலைக்காக ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஜெகன் (23) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது பணகுடியிலிருந்து ரோஸ்மியாபுரம் வழியாக வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நாகராஜன் என்பவர் ஓட்டி வந்தார். ரோஸ்மியாபுரம் பகுதியில் ஆட்டோவும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த சுடர்மணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோ டிரைவர் உட்பட 7 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.