/உள்ளூர் செய்திகள்/திருச்சி/டாஸ்மாக் பூட்டை உடைத்தும் "திருதிரு'வென விழித்த திருடன்டாஸ்மாக் பூட்டை உடைத்தும் "திருதிரு'வென விழித்த திருடன்
டாஸ்மாக் பூட்டை உடைத்தும் "திருதிரு'வென விழித்த திருடன்
டாஸ்மாக் பூட்டை உடைத்தும் "திருதிரு'வென விழித்த திருடன்
டாஸ்மாக் பூட்டை உடைத்தும் "திருதிரு'வென விழித்த திருடன்
துறையூர்: துறையூர் டாஸ்மாக் கடையில் இரவில் கஷ்டப்பட்டு கடப்பாறை போட்டு நெம்பி பூட்டை உடைத்த திருடன், 'திருதிரு'வென விழித்து பணத்தை திருடாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துறையூர் மதுராபுரி மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடையும், அதன் உட்புறம் பாரும் உள்ளது.
திறந்து கிடந்த கடைக்குள் சென்று விற்பனையாளர் கல்லாபெட்டி, மதுபாட்டில்களை கணக்கிட்டு பார்த்தபோது எதுவும் திருடு போகாமல் இருந்தது கண்டு சந்தோசப்பட்டார். இச்சம்பவம் பற்றி துறை அதிகாரிகள், போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது.போலீஸ் விசாரணையில், விற்பனையாளர் வழக்கமாக வைக்கும் இடத்தை மாற்றி பணத்தை வைத்ததால் 80 ஆயிரம் ரூபாய் தப்பியது. இதேபோல் கடையில் ஒன்றிரண்டு சரக்கு பாட்டில்களே இருந்தது. அதுவும் புதுவகையாக இருந்ததால் எடுத்துச்சென்றாலும் பிரயோஜனம் இருக்காது என்பதால் அதுவும் தப்பியது என தெரியவந்தது.கஷ்டப்பட்டு கடப்பாறையால் பூட்டை உடைத்த திருடன் கடை விற்பனையாளரின் சாதுர்யத்தால் பணம் கொள்ளை போகாமல் தப்பியது.