/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிணற்றில் பிணமாக மிதந்தார் காணாமல் போன பெண்கிணற்றில் பிணமாக மிதந்தார் காணாமல் போன பெண்
கிணற்றில் பிணமாக மிதந்தார் காணாமல் போன பெண்
கிணற்றில் பிணமாக மிதந்தார் காணாமல் போன பெண்
கிணற்றில் பிணமாக மிதந்தார் காணாமல் போன பெண்
ADDED : ஆக 01, 2011 10:26 PM
கோவை : வீட்டை விட்டு வெளியேறிய பெண், தோட்டத்துக் கிணற்றில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் பிணமாக மிதந்தார்.ராமநாதபுரம்,பாரதிநகர் ஐந்தாவது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.
இவரது மனைவி கல்பனாதேவி(28). குடும்பத் தகராறு காரணமாக கடந்த 27ம் தேதி மாலை 4.00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். இச்சூழலில், எல் அன்ட் டி.,பைபாஸ் ரோடு, பெத்தக்கா தோப்பு என்ற இடத்தில் இருந்த கிணற்றில் கல்பனாதேவி பிணமாக மிதந்தது கண்டு பிடிக்கப்பட்டது.சம்பந்தமில்லாத இடத்தில் கல்பனாதேவி பிணமாக மிதந்ததால் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து, கல்பனாதேவியின் மரணம், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.