/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆதரவற்றோரை அரசு விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுஆதரவற்றோரை அரசு விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு
ஆதரவற்றோரை அரசு விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு
ஆதரவற்றோரை அரசு விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு
ஆதரவற்றோரை அரசு விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு
ADDED : செப் 03, 2011 12:28 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் ரோட்டோரத்தில் வாழ்க்கை நடத்தும் ஆதரவற்றோரை அரசு விடுதிகளில் தங்க வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத்திலிருந்து விரட்டி விடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மனநலம் பாதித்தவர்கள் பகலில் சுற்றி திரிகின்றனர். ரோட்டோரம், பஸ் ஸ்டாண்டில் இரவை கழிக்கின்றனர். இவர்களை உள்ளாட்சிகளின் நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இவர்கள் அளிக்கும் அறிக்கைபடி, அந்தந்த பகுதியில் அரசு விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரோட்டில் வாழ்க்கை நடத்துவோர் பற்றி கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான விடுதிகள் அமைக்கப்படும். விடுதியில் தொழில் பயிற்சி, மருத்துவ உதவி, கல்வி வழங்கப்படும். ராமநாதபுரம் நகரில் மட்டும் 27 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர், என்றார்.