/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அகதிகள் முகாமில் ஆஸ்திரேலியா ஆசைவெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடிஅகதிகள் முகாமில் ஆஸ்திரேலியா ஆசைவெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி
அகதிகள் முகாமில் ஆஸ்திரேலியா ஆசைவெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி
அகதிகள் முகாமில் ஆஸ்திரேலியா ஆசைவெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி
அகதிகள் முகாமில் ஆஸ்திரேலியா ஆசைவெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி
ADDED : ஆக 05, 2011 12:07 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் சிலரை
ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி மூளை சலவை செய்து நூதன மோசடியில்
ஏஜன்ட்கள் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களை கியூ பிரிவு போலீசார் கண்காணித்து
வருகின்றனர்.தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை ஆஸ்திரேலியா,
கனடாவிற்கு அழைத்து செல்வதாக கூறி ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பல்
குறிப்பிட்ட முகாம்களுக்கு சென்று அங்குள்ள ஒருவரிடம், 'வெளிநாடு அகதிகள்
முகாமில் வசதிகளும், சலுகைகளும் அதிகம். சுகபோகமாக வாழலாம்' என மூளைச்சலவை
செய்கின்றனர். ஆஸ்திரேலியா செல்ல ஒரு நபருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம்
நிர்ணயித்து 10 நபரை அழைத்து வந்தால் ஒருவருக்கான கட்டணத்தை கமிஷனாக
எடுத்து கொள்ளலாம்' என கூறுகின்றனர்.
இதற்கு ஆசைப்படுவோர், தான் தங்கியுள்ள
முகாமில் உள்ள அகதிகளில் யார் ஆஸ்திரேலியா, கனடா செல்ல விரும்புகிறார்கள்
என அறிந்து அவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.பணம் கொடுத்தவர்களை படகில் ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி குறிப்பிட்ட
ஊர்களுக்கு வரவழைத்து அங்கு தங்க வைக்கின்றனர். பின் 'போலீஸ் கெடுபிடியாக
உள்ளது மூன்று மாதத்திற்கு பின் செல்லும் போது அழைத்து செல்கிறோம்' என கூறி
திருப்பி அனுப்பிவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். இதுபோன்று நூதன மோசடி
கும்பலை பிடிக்க, அகதிகள் முகாம்களில் உள்ள ஏஜன்ட்களை கியூ பிரிவு போலீசார்
கண்காணித்து வருகின்றனர்.