/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோவில் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்: போலீஸ் விசாரணைகோவில் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்: போலீஸ் விசாரணை
கோவில் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்: போலீஸ் விசாரணை
கோவில் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்: போலீஸ் விசாரணை
கோவில் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்: போலீஸ் விசாரணை
ADDED : செப் 16, 2011 01:34 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவில் அடிவாரத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே வெண்ணந்தூர், வெள்ளைபிள்ளையார், குண்டுப்பெருமாள் கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமச்சந்திரன். அவருக்கு, மனைவி ஈஸ்வரி (30), சுகுணா (12), ரோகினி(9) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த, 9ம் தேதி காலை வீட்டை விட்டு சென்ற ஈஸ்வரி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த மகள்கள், வீடு பூட்டி கிடப்பதாக தனது தந்தை ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் ஈஸ்வரி கிடைக்கவில்லை.நேற்று முன்தினம் மாலை, குண்டுபெருமாள் கோவில் கரட்டுக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள், பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த ராமச்சந்திரன் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது, இறந்து கிடப்பது ஈஸ்வரி என உறுதி செய்தனர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈஸ்வரி இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆனதால் சம்பவ இடத்திலேயே ராசிபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடத்தி உடலை ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக, வெண்ணந்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


