/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீராணத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்வீராணத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
வீராணத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
வீராணத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
வீராணத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2011 12:44 AM
சிதம்பரம் : வீராணத்தில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அட்டவணை இனத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் வேல்ராமலிங்கம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள மனு: காவிரி டெல்டா மாவட்டத்தில் அடங்கிய சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியில் பம்பு செட்டு, ஆயில் இன்ஜின் மூலம் குறுவை சாகுபடிக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பருவமழை பெய்யாததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாலும் நடவு பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து தண்ணீர் எடுத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் விடாமல் பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு காரணங்கள் கூறி தடுக்கப்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள தண்ணீர் சென்னைக்குச் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.