Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

UPDATED : ஜூலை 28, 2011 01:59 AMADDED : ஜூலை 28, 2011 01:56 AM


Google News

தர்மபுரி : பென்னாகரம் பட்டு வளர்ச்சி துறை சார்பில் மாரண்டஹள்ளி தொழில் நுட்ப சேவை மையத்தின் சார்பில் பட்டு வளர்ச்சி துறை கிரியா ஊக்கித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் அ.மல்லாபுரம் கிராமத்தில் நடந்தது.

உதவி இயக்குனர் தனபால் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் பரசுராமன் வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கேசவன் பேசுகையில் அனைத்து விவசாயிகளும் வங்கியில் சேமிப்பு கணக்கு பற்றிய அவசியங்கள் குறித்து விளக்கினார். கிருஷ்ணகிரி மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி மாசிலாமணி, இளம்புழு வளர்ப்பின் அவசியம் மற்றும் மல்பரி தோட்ட பராமரிப்பு பற்றிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி இயக்குனர் இளையராஜா, மல்பரி தோட்டத்தில் மண் பரிசோதனை மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்தல் குறித்து விளக்கினார்.,

கலப்பின வித்தகம் பக்கிரிசாமி விவசாயிகள் குழு விவாதம் நடத்தி குழு அறிக்கை பெற்று கொண்டார். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.



தர்மபுரி மாவட்டத்தில் ஆக., 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தர்மபுரி



வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி பெருக்கையொட்டி தர்மபுரி மாவட்ட அரசு மற்றம் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், (வங்கி, கருவூலங்களை தவிர) அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக வரும் 20ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும். ஒகேனக்கல் காவிரியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் ஆடி விழா துவக்க விழா வரும் 1ம் தேதி ஒகேனக்கல்லில் கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைக்கிறார். சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us