ADDED : செப் 14, 2011 12:13 AM
காட்டுமன்னார்கோவில்:ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் திருடிய வாலிபரை போலீசார்
கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஆயங்குடிக்கு தனியார் பஸ்
சென்றது. அப்போது கண்டக்டர் ரமேஷ் பேக்கில் இருந்து பஸ்சில் பயணம் செய்த
வாலிபர் ஒருவர் 250 ரூபாயை திருடும் போது கையும், களவுமாக பிடிபட்டார்.
உடன் அவரை காட்டுமன்னார்கோவில் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், அவர்
வடக்கு கொளக்குடி தாமஸ் நகரைச் சேர்ந்த அன்சாரி மகன் நூருதீன், 28, என
தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.