Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆயுதப்படை துப்பாக்கிகள் ஆய்வு பணி இன்று ஆரம்பம்

ஆயுதப்படை துப்பாக்கிகள் ஆய்வு பணி இன்று ஆரம்பம்

ஆயுதப்படை துப்பாக்கிகள் ஆய்வு பணி இன்று ஆரம்பம்

ஆயுதப்படை துப்பாக்கிகள் ஆய்வு பணி இன்று ஆரம்பம்

ADDED : ஆக 17, 2011 02:49 AM


Google News
ஈரோடு: ஈரோடு ஆயுதப்படையில் உள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை ஆய்வு செய்யும் பணி இன்று நடக்கிறது.

ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தின் பின் பகுதியில், ஆயுதப்படை பிரிவு செயல்படுகிறது. இங்கு ஆயுதப்படை பிரிவு, மோட்டார் வாகனப் பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. ஈரோடு ஆயுதப்படை பிரிவில், ஒரு டி.எஸ்.பி., தலைமையில் 308 பேர் பணி புரிகின்றனர்.

கைதி வழிக்காவல், பணவழிக்காவல், காப்பு பணி, சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கு கூடுதல் பணி ஆகிய பணிகள், ஆயுதப்படை போலீஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வி.ஐ.பி., பாதுகாப்பு, பொதுக்கூட்டம், மறியல், முக்கியமான இடங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் ஆயுதப்படை போலீஸாருக்கு உள்ளது.

தமிழக போலீஸ் துறை மூலம், ஆயுதப்படைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கிகள், ஏ.கே.,47, கார்பன், பிஸ்ட்டல், காஸ் கண் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கலவர நேரத்தில் பயன்படுத்தப்படுத்த ஒரு 'வஜ்ரா' வேனும் உள்ளது.

ஆயுதப்படை பிரிவில் உள்ள பயிற்சி பணிமனையில் அதிநவீன இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளன. 303-ரீஃபில், எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், கார்பன், ஏ.கே.-47, ஜி.எம்., பிஸ்டன், கிளாக்-17, காஸ் கண் ஆகிய துப்பாக்கிகள் போலீஸார் பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

போலீஸ் துறைக்கு சொந்தமான இந்த ஆயுதங்கள் பழுதின்றி நன்றாக இயங்குகின்றனவா; தோட்டா பெட்டிகள் முறையாக உள்ளனவா; குறைகள் ஏதேனும் உள்ளனவா; பயன்படுத்த தகுதியானவையா என்பதை, ஆண்டுதோறும் சென்னையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

இன்று காலை சென்னையை சேர்ந்த சிறுபடைகலன் ஆய்வு அதிகாரி(டி.எஸ்.பி) குபேந்திரன் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வை முன்னிட்டு, ஈரோடு ஆயுதப்படை பணிமனையில் உள்ள உயர்ரக துப்பாக்கிகளை, துப்பாக்கி பழுது நீக்கும் பிரிவு போலீஸார் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us