Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான சம்பவம்: திட்டக்குழு உறுப்பினர் நேரில் விசாரணை

மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான சம்பவம்: திட்டக்குழு உறுப்பினர் நேரில் விசாரணை

மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான சம்பவம்: திட்டக்குழு உறுப்பினர் நேரில் விசாரணை

மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான சம்பவம்: திட்டக்குழு உறுப்பினர் நேரில் விசாரணை

ADDED : ஆக 14, 2011 02:38 AM


Google News
கோவை : கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய திட்டக்குழு உறுப்பினர், அண்ணா பல்கலை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து தனியார் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய சில புதிய நடைமுறைகளை இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளது.

கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் 'தமிழ்நாடு காலேஜ் ஆப் இன்ஜினியரிங்' எனும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 'இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்ட்ரோலிங் இன்ஜினியரிங்' துறை துவக்க விழா, கடந்த 12ம் தேதி நடைபெறவிருந்தது.

இதையொட்டி, இத்துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 11ம் தேதி இரவு 10.30 மணியளவில் மேடை அலங்காரம் மற்றும் தட்டிகள் வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹாஸ்டல் மாணவர்கள். பிரின்ட் செய்து வந்திருந்த வண்ண பிளெக்ஸ் பேனரை, ஸ்டீல் பிரேம் கொண்ட தட்டியில் பொருத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக தரையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் பிரேமை ஏழு மாணவர்கள் தூக்கி நிறுத்தினர். அப்போது உயரே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் தட்டியதும், மின்சாரம் தாக்கி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.அருகில் இருந்த பிற மாணவர்கள் உடனடியாக '108' அவசர ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நந்தகுமார், வேலுமணி, விக்னேஷ் ஆகிய மூன்று பேர் இறந்தனர். இவர்கள் மூவரும் சேலம், அந்தியூர், தேனி பகுதிகளை சேர்ந்தவர்கள். இதில் வேலுமணி, விக்னேஷ் இருவரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் பிரிவின் கீழ் படித்து வந்தனர். காயங்களுடன் தப்பிய மீதமுள்ள நான்கு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் பலியான சம்பவம் அறிந்த உடன் படிக்கும் மாணவ, மாணவியர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இச்சம்பவம் குறித்து கல்லூரி தரப்பில் கூறியது: சுதந்திர தினத்தன்று கொடியேற்ற, கல்லூரி வளாகத்தில் நீளமான இரும்பு கம்பியை தயாராக வைத்திருந்தோம். இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்ட்ரோலிங் இன்ஜினியரிங் துறை விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இருட்டில் தட்டி பொருத்துவதற்கான ஸ்டீல் கம்பியை எடுப்பதற்கு பதிலாக, 30 அடி நீளமுள்ள கொடியேற்றும் கம்பியை தூக்கியுள்ளனர். நீள மான கம்பியாக இருந்ததால் ஏழு பேர் சேர்ந்து உயர்த்தி பிடித்துள்ளனர். இதனால், உயரே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை கவனிக்கத் தவறி விட்டனர். இச்சம்பவத்தால் கல்லூரியே சோகத்தில் மூழ்கியுள் ளது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us