/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடவள்ளி பேரூராட்சி பணி ஸ்தம்பிப்புவடவள்ளி பேரூராட்சி பணி ஸ்தம்பிப்பு
வடவள்ளி பேரூராட்சி பணி ஸ்தம்பிப்பு
வடவள்ளி பேரூராட்சி பணி ஸ்தம்பிப்பு
வடவள்ளி பேரூராட்சி பணி ஸ்தம்பிப்பு
ADDED : ஆக 17, 2011 01:44 AM
பேரூர் : வடவள்ளி பேரூராட்சியை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு மாதமாக, செயல்அலுவலர் நியமிக்காததால்
பேரூராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியில் நான்கரை
ஆண்டுகளாக, வடவள்ளி பேரூராட்சியின் செயல்அலுவலராக பணியாற்றியவர் சந்திரன்.
இவர் மீது, பேரூராட்சி கவுன்சிலர்கள் கொடுத்த ஊழல் புகார்களையும் தாண்டி,
கடந்த சட்டசபை தேர்தலில் வடவள்ளி பகுதி தேர்தல் அலுவலராக
நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு,
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஒரு
மாதத்துக்கு மேலாகியும், இப்பதவியில் இது வரை யாரும் நியமிக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்களின் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், கட்டட அனுமதி,
வரிவிதிப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட முக்கிய பணிகள் அடியோடு
பாதிக்கப்பட்டுள்ளன.வடவள்ளி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு,
டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கு ஒர்க்ஆர்டர் தராததால் வளர்ச்சிப் பணிகள்
முடக்கம், பேரூராட்சி பகுதியில் சரிவர குப்பைகள் அள்ளாததால் சுகாதார
சீர்கேடு என, பேரூராட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து
போயுள்ளது.கன்ஸ்யூமர் காஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் கூறுகையில்,
''மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, வடவள்ளியில் பவானி
கூட்டுகுடிநீர்த்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், குடியிருப்புக்கு
செல்லும் இக்குடிநீர்த்திட்ட குழாய்கள், வடவள்ளியில் ஆங்காங்கே உடைந்து
தண்ணீர் வீணாகிறது. குடிநீர்வாரிய அதிகாரியுடன், பேரூராட்சி அதிகாரி
கூட்டுஆய்வு மேற்கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். ஆனால்,
பேரூராட்சியில், ஒருமாதமாக செயல்அலுவலர் இல்லாததால் அடிப்படை பிரச்னைகளை
யாரிடமும் தெரிவிக்க முடிவதில்லை. இளநிலை உதவியாளருமில்லை. சமீபத்தில்,
துவாரகநாத்சிங் என்பவர், ஒரேநாள் மட்டும் ஆபீசுக்கு வந்து விட்டு,
பெரியநாய்க்கன்பாளையம் பேரூராட்சிக்கு இடமாறுதலாகிச் சென்று விட்டார்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்; இதனால்
வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன,''என்றார். இது தொடர்பாக,
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெகதீசிடம் கேட்டபோது,''வடவள்ளிக்கு புதிய
செயல்அலுவலராக, நாகமுத்து பொறுப்பேற்க உள்ளார்,'' என்றார்.