/உள்ளூர் செய்திகள்/சென்னை/அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக களமிறங்கும் கல்லூரி மாணவர்கள்அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக களமிறங்கும் கல்லூரி மாணவர்கள்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக களமிறங்கும் கல்லூரி மாணவர்கள்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக களமிறங்கும் கல்லூரி மாணவர்கள்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக களமிறங்கும் கல்லூரி மாணவர்கள்
ADDED : ஆக 23, 2011 02:01 AM
சென்னை : அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, சென்னை கல்லூரி மாணவர்கள் ஆர்வத்தோடு
களமிறங்கியுள்ளனர்.லோக்பால் சட்ட மசோதாவில், பிரதமர், நீதிபதி ஆகியோரை
சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக
தற்போது கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 20, 21 ஆகிய
தேதிகளில் மெரீனாவில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்திற்கு,
கல்லூரி மாணவர்கள் தலைமை தாங்கினர்.கடந்த 21ம்தேதி நடந்த 'பைக்' பேரணியில்
மாநில கல்லூரி, லயோலா கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி,
சட்டப்பல்கலைக்கழகம், எம்.எஸ்.என்., ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்
பங்கேற்றனர். அவர்கள் திருவான்மியூர் எல்.பி.சாலையில் ஆறுநாட்களாக
உண்ணாவிரதம் இருக்கும் 35 பேரை உற்சாகப்படுத்தி விட்டு, கிழக்கு கடற்கரை
சாலை சென்று லோக்பால் குறித்து பிரசாரம் செய்தனர்.துரைப்பாக்கத்தில் உள்ள
எம்.எஸ்.என் ஜெயின் மற்றும் டி.பி.ஜெயின் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்,
வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அனைத்து கல்லூரி மாணவர்களின்
போராட்டத்தை ஒருங்கிணைக்க அந்தந்த கல்லூரி மாணவர் சங்க தலைவர்கள், மாணவர்
சங்க அமைப்புகள், சமூக இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு
வருகிறது.