ADDED : ஆக 19, 2011 06:15 AM
கயத்தாறு:கயத்தாறு அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கீழசெழியநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமகிருஷ்ணன்(35) கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று மாலையில் வேலை முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கோவையைச் சேர்ந்த கனி மகன் சேகர் ஓட்டி வந்த கார் ராமகிருஷ்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் பலியானார். கயத்தாறு போலீசார் விரைந்து வந்து ராமகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.